புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-11-27 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் அன்பரசு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மறுக்கப்படும் அகவிலைப்படி, முடக்கப்பட்ட சரண் விடுப்பை உடனே வழங்க வேண்டும். கருவூலத்துறை உள்ளிட்ட அரசுத் துறை பயன்படுத்தும் மென்பொருள் திட்டங்களை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்