புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் கிராம ஊழியர் சங்க வட்ட மாநாட்டில் தீர்மானம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.

Update: 2022-08-21 13:04 GMT

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க 2-வது வட்ட மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. வட்ட தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பழனி, அசோக், வட்ட இணை செயலாளர்கள் கருணாநிதி, சக்கரவர்த்தி, ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவி வரவேற்றார். பொருளாளர் கருணாநிதி வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாநாட்டில் மாநில செயலாளர் பெருமாள், முன்னாள் மாநில தலைவர் அன்சர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தையே வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் நாள் கணக்கில் வழங்க வேண்டும். இரவு காவல் பணியை நிறுத்த வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவிதத்திலிருந்து 30 சதவிதமாக உயர்த்தி வழங்குவதோடு பணிமூப்பு தகுதி காலத்தை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். கிராம உதவியாளர்கள் ஓய்வு பெறும்போது கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் சங்கர், செயலாளர் ரமணன், பொருளாளர் மெய்யழகன், கிராம உதவியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க தலைவர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சுஜாதா நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்