இந்து முன்னணி பெயர் பலகையை சேதப்படுத்திய மர்மநபர்
இந்து முன்னணி பெயர் பலகையை சேதப்படுத்திய மர்மநபர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வேலூர்
இந்து முன்னணி பெயர் பலகையை சேதப்படுத்திய மர்மநபர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் செல்லும் சாலையில் இந்து முன்னணி சார்பில் பெயர் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் மாநில தலைவர் ராமகோபாலன் புகைபடம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் பெயர் பலகையையும், ராமகோபாலன் உருவப்படத்தையும் சேதப்படுத்தியுள்ளார்.
இதில் ஈடுபட்டவரின் உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. நேற்று இதனை பார்த்த இந்து முன்னணியினர் அதிர்ச்சியடைந்தனர். பெயர் பலகையை சேதப்படுத்திய மர்மநகரை கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியுடன் இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட பொருளாளர் சம்பத் தலைமையில் இந்து முன்னனியினர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.========