கோவில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்ற மர்மநபர்கள்

கோவில் பூட்டை உடைத்து உண்டியலை மர்மநபர்கள் தூக்கி சென்றனர்.

Update: 2022-12-10 12:19 GMT

ஜோலார்பேட்டை

கோவில் பூட்டை உடைத்து உண்டியலை மர்மநபர்கள் தூக்கி சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஜோலார்பேட்டை அருகே சோலையூர் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் உண்டியலை பெயர்த்து தூக்கிச் சென்று விட்டனர்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவில் கதவு திறந்த நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த உள்ளே சென்று பார்த்த போது கோவில் உண்டியலை அறுத்து தூக்கிச் சென்றது தெரியவந்தது.

தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர்


Tags:    

மேலும் செய்திகள்