மதுரை விமான நிலையத்தில் உள்ள கொரோனா பரிசோதனை முகாமை அமைச்சர் திடீர் ஆய்வு

மதுரை விமான நிலையத்தில் உள்ள கொரோனா பரிசோதனை முகாமை அமைச்சர் திடீர் ஆய்வு செய்தார்

Update: 2023-01-03 19:31 GMT


புதிய வகை கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. அதன்படி கடந்த வாரம் முதல் மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டு அங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டனர். அப்போது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி செல்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவர் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முகாமை திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது பரிசோதனைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டு பயணிகள் எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்