பால் வியாபாரி சாவு

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-24 16:28 GMT

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எம்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 64). பால் வியாபாரி. நேற்று மாலை இவர், எம்.வாடிப்பட்டியில் இருந்து மரியாயிபட்டிக்கு பால் கறப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மரியாயிபட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு நோக்கி சரத்மயூரான் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்