சிவகாசி
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கலந்து கொண்ட சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் கூட்டம் முடிந்த பின்னர் தனது காரில் சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மத்திய சேனை அருகே சாலை விபத்தில் சிக்கி பள்ளபட்டியை சேர்ந்த முனியராஜ் மற்றும் அவரது 9 வயது மகன் இருவரும் படுகாயம் அடைந்து நிலையில் இருந்தனர். இதனை கவனித்த மேயர் சங்கீதா இன்பம் தனது காரை நிறுத்தி காயம் அடைந்து நடுரோட்டில் கிடந்த தந்தை, மகனை மீட்டு வந்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு தந்தை, மகன் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவகாசி மேயரின் இந்த மனித நேய செயலை பொதுமக்கள் பாராட்டினர்.