மனைவியை கொன்ற கொத்தனார் கைது

பழனி அருகே மனைவியை கொன்ற கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-28 19:00 GMT

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 28). கொத்தனார். இவருடைய மனைவி மாலதி (24). கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த திருமூர்த்தி, மனைவி என்றும் பாராமல் அந்த பகுதியில் கிடந்த கல்லை தூக்கி மாலதியின் தலையில் போட்டு கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையில் தலையில் கல்லை போட்டு மாலதியை திருமூர்த்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் நேற்று திருமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்