மதுபோதையில் தூங்கிய கொத்தனார் திடீர் சாவு

வில்லுக்குறி அருகே மதுபோதையில் தூங்கிய கொத்தனார் திடீரென இறந்தார்.

Update: 2023-02-03 18:45 GMT

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே மதுபோதையில் தூங்கிய கொத்தனார் திடீரென இறந்தார்.

வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு பகுதியை சேர்ந்தவர் எஸ்தாக் (வயது 58), கொத்தனார். இவருக்கு அதிக மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரியாக வேலைக்கு ெசல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த எஸ்தாக் இரவு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலை அவருடைய மனைவி டீ கொடுப்பதற்காக எஸ்தாக்கை எழுப்பியபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த இரணியல் போலீசார் எஸ்தாக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்