குளத்தில் விழுந்து கொத்தனார் பலி

நெல்லை டவுன் நயினார்குளத்தில் விழுந்து கொத்தனார் பலியானார்.

Update: 2023-03-10 20:03 GMT

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த முருகன் மகன் பேச்சிமுத்து (வயது 27). கொத்தனார். இவர் நேற்று நெல்லை டவுன் வழுக்கோடை பகுதியில் ஒரு துக்க வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் நயினார்குளம் கரைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி இறந்தார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது உடலை மீட்டனர். தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் பேச்சிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்