மரத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் சாவு

தக்கலை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் சாவு

Update: 2022-12-18 18:45 GMT

தக்கலை, 

தக்கலை அருகே உள்ள புங்கறை, எள்ளுவிளையை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37), கொத்தனார். இவர் நேற்று காலை 11 மணி அளவில் அவருக்கு சொந்தமான புளியமரத்தில் இருந்து புளி பறிப்பதற்காக மனைவி சுதாவுடன் (35) சென்றார். அவர் மரத்தில் ஏறி புளியை பறித்து போட்டதை சுதா சேகரித்து கொண்டு இருந்தார்.

அப்போது மரத்தின் ஒரு கிளையில் இருந்து மற்றொரு காய்ந்த கிளையில் சுதாகர் காலால் மிதித்தபோது மரக்கிளை முறிந்தது. இதில் சுதாகரும் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

உடனே சுதாகரை உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, சுதாகர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்கள்.

இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சுதாகருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்