கர்ப்பிணியை பரிசோதனை செய்ய முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை பரிசோதனை செய்ய முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-22 17:26 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி இரவில் பிரசவ வார்டுக்குள் அத்துமீறி மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ய முயன்றுள்ளார். அப்போது கர்ப்பிணி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் மர்மநபரை பிடித்து குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், மர்ம நபர் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சுகுமார் (வயது 30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், சுகுமாரை கைது செய்து சிறையில் அடைகத்தனர்.

சுகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று சுகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்