மணல் கடத்த முயன்றவர் கைது

ஜோலார்பேட்டை அருகே மணல் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-07 18:15 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த செட்டேரி டேம் அருகே உள்ள கானாற்றில் மணலை கடத்துவதற்காக அதனை ஜலித்துக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசார் கண்டதும் இருவரும் தப்பி ஓட முயன்றனர் அவர்களை போலீசார் விரட்டி சென்றதில் ஒருவரை மடக்கு பிடித்தனர். விசாரணை செய்ததில் அவர் வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சூர்யா (வயது 25) என்பதும் தப்பி ஓடியவர் செட்டேரி டேம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை என்பதும் அரசுக்கு சொந்தமான இடத்தில் மணலை கடத்த ஜல்லடை வைத்துக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய செல்லதரையை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்