பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஏா்வாடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-24 18:59 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி மறக்குடி தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் பிரான்சிஸ் சாவியோ. இவருடைய குடும்பத்தினருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் இசக்கிராஜா (வயது 26) குடும்பத்தினருக்கும் பொது முடுக்கில் தூண் கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

நேற்று ஜோசப் பிரான்சிஸ் சாவியோ மனைவி ராஜேஸ்வரி (37) தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு தந்தை அனந்தப்பனிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிராஜா, ராஜேஸ்வரி குடும்பத்தினரை அவதூறாக பேசினார். இதனை அனந்தப்பன் தட்டி கேட்டார்.

இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கிராஜா அனந்தப்பனின் கை விரல்களில் கடித்தார். மேலும் ராஜேஸ்வரியிடம் கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதுகுறித்த புகாரின்பேரில், ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிராஜாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்