பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மானூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-25 20:04 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார் குளத்தை சேர்ந்தவர் செல்லப்பா என்பவரது மகன் கிருஷ்ணன் (வயது 45). இவர் 45 வயது பெண்ணை வழிமறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அந்த பெண் தட்டிக்கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்