மூதாட்டியை மிரட்டியவர் கைது

முத்துப்பேட்டையில் மூதாட்டியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-25 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் மேல்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி காந்திமதி(வயது75). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் முருகன்(31) என்பவர் காந்திமதியின் வீட்டுக்கு சென்று அவரது மகன் வெங்கடேஷ் பணம் தரவேண்டி உள்ளது என கூறி அவரிடம் தகராறு செய்ததுடன் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காந்திமதி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாா். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்