பணம் கேட்டு மிரட்டியவர் கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-16 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஸ்ரீவைகுண்டம் மறுகால் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஒண்டிவீரன் (வயது 36) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒண்டிவீரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்