பயணியிடம் செல்போன் திருடியவர் கைது
பயணியிடம் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்
மதுரை
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 46). சம்பவத்தன்று இவர் ஊருக்கு செல்வதற்காகமதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஒருவர் திருட முயன்றார். அவரை கையும் களவுமாக சார்லஸ் பிடித்தார். பிடிபட்ட வாலிபரை மாட்டுத்தாவணி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது திருச்சி இடைத்தெருவை சேர்ந்த கோட்டையப்பன்(38) என்று தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.