மனைவியின் மீது கொதிக்கும் பாலை ஊற்றியவர் கைது

மனைவியின் மீது கொதிக்கும் பாலை ஊற்றியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-27 19:28 GMT

விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவரது மனைவி வத்சலா (29). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் அருண்குமார் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வத்சலாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வத்சலா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது அவர் சூலக்கரை வள்ளுவன்நகரில் தனது தந்தை கைலாசந்தரின் வீட்டில் உள்ளார். இந்நிலையில் அருண்குமார் தனது மாமனார் வீட்டுக்கு சென்று குழந்தையை பார்க்க வேண்டும் என்று தகராறு செய்ததுடன் வத்சலாவின் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த வத்சலா சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றிய புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் அருண்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்