பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது
சூளகிரி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.
சூளகிரி:-
சூளகிரி அருகே சுண்டகிரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 48) என்பவர், 25 வயது பெண் ஒருவரது கையை பிடித்து இழுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர்.