வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது

சோளிங்கரில் வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-20 19:37 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த வீராணத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 23). இவர், சோளிங்கர் பஜார் பிள்ளையார் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது கொடைக்கல் மோட்டூரை சேர்ந்த வெற்றிவேல் (27) என்பவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹரிஹரனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்