மூதாட்டியை அரிவாளால் வெட்டியவர் கைது
கூடலூர் அருகே மூதாட்டியை அரிவாளால் வெட்டியவரை போலீசாா கைது செய்தனர்.
கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் தேனம்மாள் (வயது 75). இவரது அக்காள் மகன் ஜீவா (56). இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் தேனம்மாள் தான் கொடுத்த பணத்தை ஜீவாவிடம் திருப்பி கேட்டார். அப்போது பணத்தை கொடுக்க மறுத்த ஜீவா, அவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அரிவாளால் வெட்டினார். இதுகுறித்து தேனம்மாள் கூடலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜீவாவை கைது செய்தனர்.