மகனை கொடுவாளால் வெட்டியவர் கைது

Update: 2023-02-23 19:30 GMT

ஊத்தங்கரை:-

சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 74), இவருடைய மனைவி சரசு (70). இவர்களின் மகன் வெங்கடேசன் (45). மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று வெங்கடேசன் வீட்டில் இருந்த டி.வி. ரிமோட்டை சேதப்படுத்தி உள்ளார். இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், கொடுவாளால் மகன் வெங்கடேசனை வெட்டியதாக தெரிகிறது. காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சரசு கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்