வாலிபரை கம்பியால் தாக்கியவர் கைது

வாலிபரை கம்பியால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-07 20:07 GMT

வடக்கன்குளம்:

வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர்கள் சஞ்சய் (வயது 32), ராஜ்குமார் (32). இவர்கள் 2 பேரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜ்குமார், சஞ்சயை கம்பியால் தாக்கியதில் லேசான காயம் அடைந்தார்.

இதையடுத்து சஞ்சய் இரவில் ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிள் தீயில் கருகியது. இதுகுறித்து 2 பேரும் பணகுடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். சஞ்சய் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்