உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே இடையார் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு(வயது 74). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் கலியபெருமாளின் மகன் மோகன்தாஸ் (46) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கராசு உடையார்பாளையம் கடைவீதிக்கு சென்றபோது, அவரை மோகன்தாஸ் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீசில் தங்கராசு புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, மோகன்தாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.