விவசாயியை கல்லால் தாக்கியவர் கைது

குழந்தைக்கு பிஸ்கெட் வாங்கிக் கொடுத்த தகராறில் விவசாயியை கல்லால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-19 18:11 GMT

கலவை மேட்டுக்காலனியை சேர்ந்த பொன்னன் மகன் கோபி. இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்தநிலையில் கோபி, சக்திவேல் குழந்தைகளுக்கு பிஸ்ெகட் வாங்கிக்கொடுத்துள்ளார். இதை பார்த்த சக்திவேல் ஏன் பிஸ்ெகட் வாங்கிக்கொடுத்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது சக்திவேல் கல்லால் கோபி தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கோபி கலவை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வாலாஜா மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்