கோவிலில் பக்தரை தாக்கியவர் சிக்கினார்

நெல்லை தச்சநல்லூர் அருகே கோவிலில் பக்தரை தாக்கியவர் போலீசாரிடம் சிக்கினார்.

Update: 2023-02-22 22:06 GMT

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவர் ேநற்று முன்தினம் நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கம்மங்குளத்தை சேர்ந்த முருகன் (23) என்பவர், கணேசனை அவதூறாக பேசி, அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்