தடுப்புச்சுவரில் ஏறிய லாரி

தடுப்புச்சுவரில் லாரி ஏறி நின்றது.;

Update:2023-10-02 03:32 IST

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் ரோட்டில் மடவார் வளாகம் விலக்கு அருகே தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. சாலையின் இரு பாகத்தையும் பிரிக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி நேற்று லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி தடுப்புச்சுவரில் ஏறி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுகுறித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் கிளைச்செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மேற்கண்ட பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Tags:    

மேலும் செய்திகள்