லாரி மோதி கூலித்தொழிலாளி பலி

மோகனூர் அருகே லாரி மோதி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-25 18:59 GMT

மோகனூர்

எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டியை சேர்ந்தவர் நடேசன் (வயது 60) கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று நாமக்கல்லில் இருந்து வளையப்பட்டி நோக்கி தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது வளையப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, மோகனூரில் இருந்து வளையப்பட்டி நோக்கி வந்த ஒரு லாரி நடேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்