விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்: போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் போராட்டம்

“விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2023-04-11 20:47 GMT

நெல்லை,

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் முன்பே அனுமதி வழங்கியிருந்தால் தமிழகத்தில் 40 உயிர்கள் பலியாகி இருக்காது. தமிழக கவர்னர் பல்வேறு விஷயங்களில் விஞ்ஞானத்துக்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார். உலகில் அனைத்து நாடுகளும் மத அடிப்படையில் ஆட்சி நடத்துவதாக உண்மைக்கு மாறாக பேசுகிறார்.

அரசியல் சட்டத்தின் விதிகளை மீறி கவர்னர் செயல்படுகிறார். தமிழக அரசுக்கு இடையூறு செய்யும் விதமாக, போட்டி அரசியல்வாதி போல் அவர் செயல்படுகிறார்.

போராட்டம்

அம்பையில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் வேதனை அளிக்கிறது. குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மனித உரிமை மீறல் சம்பவத்தை நடத்தி இருக்கிறார். அவருக்கு ஆதரவாக போலீசாரும் செயல்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்படாதது சட்ட விரோத நடவடிக்கை. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்