கழுமலையாறு பாசன வாய்க்காலை முன்கூட்டியே தூர்வார வேண்டும்

ஆகாயத்தாமரை மண்டி கிடக்கும் கழுமலையாறு பாசன வாய்க்காலை முன்கூட்டியே தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-27 18:45 GMT

சீர்காழி:

ஆகாயத்தாமரை மண்டி கிடக்கும் கழுமலையாறு பாசன வாய்க்காலை முன்கூட்டியே தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசன வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்காலை நம்பி தேனூர், மேலத்தேனூர், கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி, அகனி, மருதங்குடி, ஆலஞ்சேரி, அரூர், தென்னங்குடி, தாடாளன் கோவில், கோவில்பத்து, சீர்காழி, தென்பாதி, திட்டை ,தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

மேலும் இந்த கழுமலையாறு வாய்க்கால் சீர்காழி நகர் பகுதியின் வடிகால் வாய்க்காலாகவும் செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை

இந்த நிலையில் இந்த வாய்க்காலில் மேலத்தேனூர் முதல் சீர்காழி புதிய பஸ் நிலையம் வரை வாய்க்காலில் பல்வேறு இடங்களில் செடி, கொடிகள், ஆகாயத்தாமரைகள் மண்டி ஆக்கிரமித்துக் காணப்படுகிறது. நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் பாசன வாய்க்காலில் விடப்பட்டு வருகிறது. மேலும் சீர்காழி நகர் பகுதியில் உள்ள குப்பைகள் பாசன வாய்க்காலில் கொட்டப்பட்டும் வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் இந்த ஆண்டு பாசன வசதி பெறுவது கேள்விக்குறியாக உள்ளதாகவும், பாசன வாய்க்காலை தூர்வாரவேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே அரசு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முன்கூட்டியே பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி கழிவுநீர்களை பாசன வாய்க்காலில் விடாதவாறு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்