விசாரணை கைதி சிக்கினார்

போலீசாரிடம் இருந்து தப்பியோடிய விசாரணை கைதி சிக்கினார்.

Update: 2023-09-03 02:00 GMT

திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்தவர் விஜய் வெள்ளைச்சாமி (வயது 22). நேற்று முன்தினம் இவர், அப்பகுதியில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் வெள்ளைச்சாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மாவட்ட சிறையில் அடைப்பதற்காக, ஜீப்பில் போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, சிறை அருகே சென்றபோது போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விஜய் வெள்ளைச்சாமி தப்பியோடி தலைமறைவானார்.

இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கை, கால்களில் காயங்களுடன் ஆர்.வி. நகர் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அப்போது காயம் காரணமாக கை, கால்களில் வலி அதிகமாக இருந்ததால் வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாக போலீசாரிடம் விஜய் வெள்ளைச்சாமி கூறியுள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். மேலும் அவர் சிகிச்சை பெறும் அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்