அதிக வட்டி கேட்டு மிரட்டியவர் கைது

அதிக வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-29 18:32 GMT


கரூர் ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுசிலா (வயது 67). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பம் பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (50) என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து சுசிலா அதற்குரிய வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரம் செல்வகுமாருக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என கேட்டதுடன், சுசிலாவின் வீட்டிற்கு சென்று செல்வக்குமார் அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுசிலா கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிந்து, செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்