விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ள இடைகால் சிவன் கோவில் தெருவைச் ேசர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 27). இவர் கடந்த 31-ந் தேதி இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். முக்கூடல் அருகே அடைச்சாணி விலக்கு பகுதியில் வந்த போது, அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்-ஆட்ேடா மோதிக் கொண்டது. இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.