விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

கிணத்துக்கடவு அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-07-05 17:38 GMT

கிணத்துக்கடவு


திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக் அலி (வயது 24). இவர் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். முகமது சாதிக் அலி கடந்்த மாதம் 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் ஆழியாறுக்கு சென்றுவிட்டு, சின்னியம்பாளையம் திரும்பினார். எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் 4 வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த போது முகமது சாதிக் அலி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகமது சாதிக் அலி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்