தீயில் எரிந்து ஓட்டு வீடு நாசம்

பூம்புகாரில் தீயில் எரிந்து ஓட்டு வீடு நாசம்

Update: 2023-02-06 18:45 GMT

திருவெண்காடு:

பூம்புகார் பல்லவனம் பகுதியில் வசித்து வருபவர் ரவி குருக்கள். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் இவரது ஓட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த பூம்புகார் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் ஓட்டு வீடு நாசமானது. இதை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பவுன்ராஜ் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, கட்சி சார்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது அவருடன் பால் கூட்டுறவு சங்க தலைவர் பாலு, ஒன்றிய பேரவை செயலாளர் செந்தில் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்