பூலாம்பாடி பேரூராட்சி துணை தலைவர் வீடு முற்றுகை

சாலை பணி அமைக்க இடையூறாக இருப்பதாக கூறி பூலாம்பாடி பேரூராட்சி துணை தலைவர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-07-24 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடி பேரூராட்சி துணை தலைவராக இருப்பவர் செல்வலட்சுமி. தி.மு.க.வை சேர்ந்த 7-வது வார்டு கவுன்சிலரான இவர் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலை அமைப்பதற்கு இடையூறாக இருப்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் நேற்று மாலை அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது "வளர்ச்சிப்பணிகளை செய்வதற்கு முட்டுக்கட்டை போடாதே", "அடிப்படை வசதிகளை செய்து கொடு" என பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் போராட்டம் குறித்து பேரூராட்சி துணைதலைவர் கூறுகையில், எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன். வளர்ச்சி பணிக்கு நான் தடையாக இல்லை என கூறினார். பூலாம்பாடி பேரூராட்சி துணை தலைவரை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்களே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்