வீட்டின் சுவா் இடிந்து விழுந்து பெண் சாவு

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து பெண் சாவு

Update: 2022-11-13 20:23 GMT

தஞ்சை அருகே பெய்த பலத்த மழையால் வீ்ட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந் தாா்.

பலத்த மழை

தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது.

பூதலூர் அருகே உள்ள இந்தளூர் ஊராட்சிக்கு உட்பட்ட நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மனைவி செல்லபாப்பா(வயது55). நேற்றுமுன்தினம் இரவு செல்லபாப்பா தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார்.

பரிதாப சாவு

அப்போது திடீரென வீட்டின் மண் சுவர் மற்றும் மேற்கூரை ஓடுகள் இ்டிந்து செல்லபாப்பா மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இ்டத்திலேயே உயிரிழந்தார். முருகையன் மற்றும் அவருடைய, மகள் பவித்ரா ஆகியோர் காயமின்றி உயிர்தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பூதலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்லபாப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலத்த மழையால் வீ்ட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் பூதலூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்