வீடு இடிந்து 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்

வீடு இடிந்து 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்

Update: 2022-11-19 20:42 GMT

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்கு நாவினிப் பட்டியை சேர்ந்தவர் பாண்டி. கூலித் தொழிலாளி. இவருக்கு முத்துப்பிள்ளை என்ற மனைவியும், பூமாயி என்ற மகளும், பூமிராஜ் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் ஓட்டு வீட்டில் வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்தது. இதில் பாண்டியின் மனைவி முத்துபிள்ளை, மகள் பூமாயி, மகன் பூமிராஜ், மற்றும் பூமாயின் குழந்தைகள் புகழினி (வயது4), தர்னுஷ் (1) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீடு இடிந்து விழுந்ததில், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது. வீடு முழுமையாக சேதமடைந்ததால் அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்