ஓட்டல் அதிபர் பலி

விபத்தில் ஓட்டல் அதிபர் பலியானார். மனைவி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-08-25 18:58 GMT

சிவகாசி காமராஜபுரம் காலனியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 54). சிவகாசியில் ஓட்டல் நடத்தி வந்த இவர் தனது மனைவி சாந்தி லட்சுமியுடன் தனது காரில் மதுரைக்கு சென்றார். காரை இவரே ஓட்டிச் சென்றார். மதுரையில் வேலையை முடித்துவிட்டு காரில் சிவகாசி கிளம்பினார். விருதுநகர்- சிவகாசி ரோட்டில் உப்போடை அருகே சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த ஓட்டல் அதிபர் பஞ்சாட்சரம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது மனைவி சாந்தி லட்சுமி படுகாயம் அடைந்தார். இவர் சிவகாசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றி இவரது சகோதரர் வைரமணி (63) கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்