உள்துறை செயலாளர் வேலூர் கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்

மாநகராட்சி உதவி கமிஷனர் லஞ்சம் பெற்ற வழக்கில் உள்துறை செயலாளர் வேலூர் கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்

Update: 2022-07-21 18:06 GMT

வேலூர் மாநகராட்சி 3-வது மண்டல பொறுப்பு உதவி கமிஷனராக தியாகராஜன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு பணிபுரிந்தார். அப்போது அவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.29 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை நீதித்துறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக 2012-ம் ஆண்டு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரும், தற்போதைய உள்துறை கூடுதல் தலைமை செயலாளருமான பணீந்தர ரெட்டி நேற்று வேலூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்