சாலையில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக சீரமைத்த நெடுஞ்சாலை துறையினர்
பாவூர்சத்திரம் அருகே சாலையில் ஏற்பட்ட விரிசலை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைத்தனர்.
பாவூர்சத்திரம்:
நெல்லை- தென்காசி சாலை தற்போது நான்கு வழி சாலையாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மகிழ்வண்ணநாதபுரம் பஸ்நிறுத்தத்தின் அருகே நெல்லை- தென்காசி சாலையில் நாகல்குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே நான்கு வழிச்சாலைக்காக வாறுகால் அமைத்து தார் சாலை போடப்பட்டது. இந்த சாலையில் திடீரென விரிசல் விழுந்தது. அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அதில் போடப்பட்டுள்ள தார் சாலைகளை அகற்றி, புதிதாக சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.