தூக்கில் தொங்கிய தொழிலாளி பிணம்
ஆம்பூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணம் கிடந்தது.
ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 32). இவர் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளாள். நேற்று முன்தினம் இரவு முருகன், வீட்டில் உள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் போலீசார், முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.