தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-01-11 19:58 GMT

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மேலப்பாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் இருக்கன்துறையில் புதிதாக அனுமதி கோரப்பட்டுள்ள 3 கல்குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாது.

சட்டப்பேரவையில் கவர்னர் ஆற்றக்கூடிய உரை என்பது ஆளும் அரசின் கொள்கையை எடுத்துச் சொல்லக்கூடிய உரையாகும். அந்த உரையில் அவர் தனது சொந்த விறுப்பு, வெறுப்புகளை காட்டக்கூடாது என்பது மரபு. ஆனால், அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக அவர் அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக, சிலவற்றை வேண்டுமென்றே விடுத்தும், சிலவற்றை தானாகவே சேர்த்தும் உரை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் மரபை மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசையும், அரசை தேர்ந்தெடுத்த தமிழக மக்களையும் அவமதித்துள்ளார்.

அவரின் நடவடிக்கை என்பது அரசியல் சாசனப்படியும், வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இத்தகைய நடைமுறைகளை மீறும் வகையில் அவரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஆகவே தமிழக கவர்னர் ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். திருப்பூரில் தமிழர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி மாபெரும் மாநாட்டை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்