கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அரசே பொறுப்பு:உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. பேட்டி

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அரசே பொறுப்பு என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தொிவித்தாா்.

Update: 2023-05-17 18:45 GMT


மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று காலை புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு உடல்நலம் விசாரித்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேரின் உயிரை கள்ளச்சாராயம் பறித்திருக்கிறது. இந்த உயிரிழப்புகளுக்கு பிறகு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை முன்பே எடுத்திருந்தால் ஒரு உயிர்கூட பறிபோய் இருக்காது. காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்திருக்கிற நடவடிக்கை போதாது. அந்தப்பகுதி போலீஸ் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் என ஒட்டுமொத்தமாக அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்கு முழுக்க, முழுக்க அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு உயிருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது போதாது. குறைந்தபட்சம் ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதிலும் குறைந்த வயதுடையவர்கள் இறந்திருந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து சாதிக்கலவரங்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை, கோவில்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை செல்லவிடாமல் தடுத்தல் போன்ற சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் கோட்டையை நோக்கி போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்