அரசு பஸ் டிரைவருக்கு திடீரென வலிப்பு...! தறிகெட்டு ஓடிய பஸ் 5 பைக்குகள் மீது மோதி ஒருவர் பலி

கிருஷ்ணகிரியில் அரசு பஸ் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சாலையில் நின்ற வாகனங்கள் மீது பஸ் மோதியதால் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-12-19 05:59 GMT

கிருஷ்ணகிரி,

பெங்களூருவில் இருந்த திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுள்ளது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் பழனி என்பவர் பஸ் ஓடிவந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இன்று காலை இந்த பஸ் வந்துள்ளது.

அப்போது பஸ் டிரைவர் பழனிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் நின்ற 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளின் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் காலை நேரம் என்பதால் சாலையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர், விபத்து குறித்து அறித்து சம்பவ இடத்திற்கு வந்த மத்தூர் போலீசார் வலிப்பு வந்து மயங்கி கிடந்த டிரைவர் பழனி மற்றும் பஸ் மோதியதால் படுகாயம் அடைந்த முதியவர் ஆகிய 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அதில் படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் டிரைவர் பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்