பென்னாகரம் பகுதியில் பலத்த மழை: மின்னல் தாக்கி 25 ஆடுகள் செத்தன
பென்னாகரம் அருகே பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 25 ஆடுகள் செத்தன.
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 25 ஆடுகள் செத்தன.
பலத்த மழை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோடுப்பட்டியை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி கோவிந்தம்மாள். விவசாயிகளான இவர்கள் ஆடுகளை வளர்த்து வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இவர்கள் பன்னிகுழி பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கணவன்-மனைவி 2 பேரும் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வந்து அங்குள்ள கொட்டகையில் அடைத்தனர். சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் கொட்டகை மீது மின்னல் தாக்கியது.
25 ஆடுகள் செத்தன
இதில் சம்பவ இடத்திலேயே 25 ஆடுகளும் செத்தன. மேலும் கீற்று கொட்டகை தீப்பிடித்து எரிந்து சேதமானது. இதை கண்டு ராஜி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மின்னல் தாக்கி 25 ஆடுகள் செத்தது குறித்து வருவாய்த்துறை மற்றும் கால்நடை மருத்துவ அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து செத்த ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் ஆடுகளை அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். மின்னல் தாக்கி செத்த ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என ராஜி- கோவிந்தம்மாள் தம்பதி கோரிக்கை விடுத்தனர்.