மதுபாட்டிலை வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

Update: 2023-03-29 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே மதுபாட்டிலை வீசி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுபாட்டில் வீச்சு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார், மணல்மேடு, திருமுல்லைவாசல், பழையார், வடரெங்கம், மகேந்திரப்பள்ளி, பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு சீர்காழியில் இருந்து வடரெங்கம் கிராமத்துக்கு பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது 52) அரசு டவுன் பஸ்சை ஓட்டி சென்றாா். வள்ளுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த அகோரமூர்த்தி கண்டக்டராக இருந்தார். பஸ்சில் சுமார் 15 -க்்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மன்னன் கோவில் என்ற இடத்தில் பஸ் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் ெதரியாத மா்ம நபர்கள் திடீரென தாங்கள் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து அரசு டவுன் பஸ் முன்புற கண்ணாடி மீது வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

டிரைவா் காயம்

இதனால் பஸ் கண்ணாடி உடைந்து டிரைவர் மீது கண்ணாடி சிதறல்கள் விழுந்து அவர் காயமடைந்தார். இதில் நிலை தடுமாறிய டிரைவர் ரமேஷ் சுதாரித்துக் கொண்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.

இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ்சை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடி மீது மதுபாட்டிலை வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். காயமடைந்த டிரைவர் ரமேஷ் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்