சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

ஆற்காடு அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2023-05-31 18:01 GMT

ஆற்காட்டை அடுத்த அண்ணா நகர் மாசாப்பேட்டை பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும், வேலூர் சத்துவாச்சாரி கண்ணமங்கலம் மதுரா புதுபேட்டை தங்கலார் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் மாசப்பேட்டையில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதிக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா மேற்பார்வையில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி, விரிவாக்க அலுவலர் காஞ்சனா, ஊர் நல அலுவலர் கீதா, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இரவு விருந்து தயாராகி கொண்டு இருந்ததை நிறுத்தியதோடு, சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்