சிறுமியின் குடும்பத்தினர் தர்ணா போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியின் குடும்பத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், சிறுவனின் உறவினர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.